
மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
ஸ்டாலின் அவர்களே உங்களின் எதிர்காலம் பற்றி ஆட்சியை பற்றி, தேர்தலிலே ஆட்சியைப் பிடிப்பதை பற்றி, நீங்கள் தொடர்ந்து கட்சிக்காரர்களுக்கு உத்தரவிடுகிறீர்கள் மக்களிடத்திலே வேண்டுகோள் விடுகிறார்கள், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறீர்கள் ஆனால் தமிழ்நாட்டு மக்களுடைய உயிர் பறிபோவதை கண்டு உங்களுக்கு பரிதாபம் ஏற்படவில்லையா? கவலைப்படவில்லையா?