
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம்! உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.