
பட்டாசு வெடி விபத்தில் உடல் சிதறி உயிரிழந்த 4 பேர்! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரணம் அறிவிப்பு!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவில் வெடிக்க கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேட்டை சேர்ந்த செல்வராஜ் இருசக்கர வாகனத்தில் 300 கிலோ நாட்டு பட்டாசு மூட்டையை வைத்துக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது பூசாரிப்பட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதியில் சென்றபோது சாலையோரம் எரிந்து கொண்டிருந்த குப்பையில் வந்த தீப்பொறி பறந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது விழுந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில், செல்வராஜ் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் (11) , தமிழ்செல்வன் (12), லோகேஷ் (20) ஆகியோரும் உயிரிழந்தனர். இந்நிலையில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார்.