மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு தனது மூச்சுக்காற்றை கொடுத்து காப்பாற்றிய இளைஞர்

வேலூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்குக்கு இளைஞர் ஒருவர் தனது மூச்சு காற்றை கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Oct 25, 2023, 7:48 PM IST | Last Updated Oct 25, 2023, 8:02 PM IST

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி மலைப்பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபு மற்றும் கலா ராணி தம்பதியரின் இரண்டாவது மகன் நிதீஷ் குமார்  (வயது 19). நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள மரத்தின் மீது  இரண்டு குரங்குகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒரு குரங்கு தவறி கீழே விழுந்துள்ளது. 

அப்போது மின்சார கம்பியின் மீது விழுந்த குரங்குக்கு மின்சாரம் தாக்கி பின்னர் கீழே விழுந்தது. இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார்  மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்த குரங்கிற்கு முதல் உதவி செய்தார். உடனடியாக அந்தக் குரங்கு சுயநினைவிற்கு வந்தது. இதனை நிதிஷ் குமாரின் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Video Top Stories