சாகசம் என்ற பெயரில் அரசுப்பேருந்தை மறித்து அடாவடி செய்த இளைஞர்

திருவண்ணாமலை வேலூர் சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து அடாவடி செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Video

திருவண்ணாமலை, வேலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்கி அதிக புகை வரும்படி சாகசம் செய்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதே போல் திருவண்ணாமலையில் வேகமாக வாகனங்களை ஓட்டுவதும், அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியும் அதிரும்படியாக பள்ளி மாணவ, மாணவிகள் மீது மோதுவது போல உரசி கொண்டு செல்வதுமாக மாணவர்கள் சாகசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Video