Asianet News TamilAsianet News Tamil

மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரே உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆட்சியர் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 116 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனிடையே கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன்,  சாவித்திரி தம்பதியரின் மகனான அஸ்வந்த் என்பவருக்கு முதல் பிறந்தநாள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

அதனை  மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிமாறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவு சாப்பிட்டார். முன்னதாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு, பேனா, பென்சில், மற்றும் நோட்டு, புத்தகம் மற்றும் மாணவர்களுக்கு உணவு வழங்கினர். தங்களுடன் சேர்ந்து ஆட்சியரும் உணவு சாப்பிட்ட நிகழ்வை மாற்றுத் திறனாளிகள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

Video Top Stories