மனு கொண்டு வந்த மாற்றுத் திறனாளிகளுடன் அமர்ந்து உணவருந்திய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து உணவு அருந்திய மாவட்ட ஆட்சியர்.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் முகாம் நடைப்பெற்றது. முகாமில் கலந்துக் கொண்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். 

Related Video