Asianet News TamilAsianet News Tamil

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குரங்கு; இளைஞர்கள் செய்த செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சி

வாணியம்பாடியில் ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு மின்சாரம் தாக்கி உயிரிந்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் குரங்குக்கு இறுதி சடங்கு செய்து மரியாதையுடன் நல்லடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First Published Apr 20, 2024, 7:35 PM IST | Last Updated Apr 20, 2024, 7:35 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டு சாலை பகுதியில் இன்று  ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு ஒன்று அங்கிருந்து மரத்தில் தாவும் போது மரத்தின் அருகில் சென்ற மின் கம்பி எதிர்பாராத விதமாக உரசியதில் மின்சாரம் பாய்ந்து குரங்கு உயிரிழந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் உயிரிழந்த குரங்கினை மீட்டு மனிதர்களுக்கு செய்யும்  சடங்குகள் போன்று  செய்து அங்குள்ள அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்துள்ளனர். 

மேலும் வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்று இறந்த குரங்குகளை மீட்டு அனுமன் கோயில் பின்புறம் நல்லடக்கம் செய்து வந்ததாகவும் தற்போது இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள குரங்கு 75வது குரங்கு என கூறப்படுகிறது. ஆறு அறிவு படைத்த மனிதன் இறப்பில் செலவு செய்ய யோசிக்கும் இந்த உலகில் ஐந்தறிவு படைத்த இந்த ஜீவனுக்கு செலவு செய்து நல்லடக்கம் செய்த இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Video Top Stories