Viral : பள்ளி வளாகத்தில் தாறுமாறாக வாகனம் ஓட்டிய மாணவன்! தட்டிக்கேட்ட ஆசிரியருடன் வாக்குவாதம்!

 மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்திற்குள் வண்டியை தாறுமாறாக ஓட்டுவதை கண்டித்த ஆசிரியர்களுடன், மாணவனும், அவரது பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Video

வேலூர் மாவட்டம், குடியாத்தில் உள்ள பள்ளி வளாகத்திற்கும் மாணவன் ஒருவன் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் மாணவனை கண்டித்துள்ளார். அந்த மாணவனும் தந்தையை அழைத்து வந்து ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "உனக்கு லைசென்ஸ் இருக்கா" என ஆசிரியர் கேட்க "அதை கேடக நீ யாரு? சொல்லி கொடுக்க தான் வாத்தியாரு. லைசென்ஸ் கேட்க உனக்கு உரிமையில்லை" என அந்த மாணவனும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி உள்ளது

Related Video