Watch : பாலாற்றில் குறைந்த விலையில் மணல் அல்ல கோரிக்கை! - மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்!
பாலாற்றில் நேரடியாக குறைந்த விலையில் மணல் அல்ல அனுமதிக்க கோரி மணல் குவாரி அருகே பாலாற்றில் மாட்டு வண்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள். அரசு மணல் குவாரி விதியை மீறி செயல்படுவதாகவும், தனியார் மணல் குவாரி போல் செயல்படுவதாகவும், போராட வந்த எங்களை தாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அரும்பருதி பாலாற்று பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிக்கு மணல் விற்பனை செய்ய இன்று முதல் அரசு அனுமதி அளித்த நிலையில் ஒரு மாட்டு வண்டிக்கு 0.25 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணம் நிர்ணித்ததாகவும், இந்த தொகைக்கு மணல் விலை நிர்ணயித்தால் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஆகவே அரசு நிர்ணயித்த கட்டணத்தை குறைத்து 250 ரூபாயாக நிர்ணயிக்க கோரி சுமார் 50 க்கும் மேற்பட்ட மாண்டு வண்டி உரிமையாளர்கள் மணல் குவாரி அருகே பாலாற்றில் மாட்டு வண்டிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் DSP திருநாவுக்கரசு மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக மனு அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து பாலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில், மணல் குவாரி அமைப்பது தொடர்பாக நீதிமன்றம் விதித்த உத்தரவை அரசு மதிக்கவில்லை, எங்களுக்கு 105 ரூபாய் வரை பீல் போட்டு வந்த நிலையில் தற்போது 800 ரூபாய்க்கு ஒரு வண்டி விற்கப்படும் என கூறுகிறார்கள். இந்த மணல் குவாரியில் இருந்து ஒரு நாளைக்கு 4 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் போகிறது. ஆனால் 200 யூனிட் போவதாக கணக்கு காட்டுகிறார்கள். 5 ஹேக்டேர் அனுமதி கொடுத்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு எடுத்திருக்காங்க. அரசு போர்வையில் தனிநபர் பல கோடி கொள்ளை அடித்து வருகிறாகள் என்றனர்.