என்ன கனவுல திடீர்னு கசாப்பு கடை சத்தம் கேக்குது? தூங்கிக்கொண்டே கறிக்கடைக்குள் காரை விட்ட ஓட்டுநர்

வேலூர் மாவட்டத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் கட்டுப்பாடின்றி கறிக்கடைக்குள் காரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார்த்திக் என்பவர் அவரது வீட்டு புதுமனை புகு நிகழ்வானது சித்தேரி பகுதியில் உள்ள தென்றல் நகரில் நடைபெற்றது. இதனால் அவர் கடந்த இரண்டு நாட்களாக தூங்காமல் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சித்தேரி பகுதியில் இருந்து பென்னாத்தூர் பகுதிக்கு அவரது உறவினர்களுடன். (ஹோண்டா கிராண்ட் ஐ 10 ) காரில் வந்து கொண்டிருந்த கார்த்திக் அப்போது தூக்க கலைப்பில் சாலையில் இருந்த வேகத்தடையின் மேல் ஏற்றியதில் நிலை தடுமாறி அருகே இருந்த பழனி என்பவருக்கு சொந்தமான கறிக் கடையின் உள் கார் நுழைந்தது. முபாரக் மனைவி சாயிஷாவின் மேல் மோதி தூக்கி வீசப்பட்டு பெரும் விபத்து ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து உடனடியாக கணியம்பாடியில் உள்ள வேலூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்ததின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாய்ஷாவை மீட்டு தூக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடையின் மேல் வெள்ளை நிறம் சாயம் பூசப்படாததால் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கின்றனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் இழப்பு எதுவும் இல்லை சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video