ஃபுல் மப்பில் அசிங்கமாக பேசிய அட்டெண்டர்.. அரசு மருத்துவமனையில் அட்டூழியம்..!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் வந்த மருத்துவ உதவியாளர் தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Share this Video

பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு கையெழுத்துப் பெறுவதற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது, உடன் சென்ற ஜெகதீசனின் மகன் அரவிந்தன், எதற்காக இந்த மருந்து என கேட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மதுபோதையில் வந்த மருத்துவ உதவியாளர் மாரிமுத்து, அவர்கள் இருவரையும் தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசியதுடன், இருவரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளார். இச்சம்பவம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Video