ஆத்தா எனக்கு நல்ல புத்திய குடு; அம்மனின் தாலியை திருடிவிட்டு சாமியிடமே வேண்டுதல் நடத்திய ஆசாமி

வேலூர் ஆணை குளத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் வந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை பறித்து சென்ற நபரால் பரபரப்பு.

Share this Video

வேலூர்மாவட்டம், வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஆணை குளத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதை போல் ஆலயத்தினுள் வந்த நபர் ஒருவர் அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை எடுத்து கொண்டு சென்றுள்ளார். இது ஆலயத்தின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோவிலின் திருட்டு சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் தெற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Video