நந்தி மீது படமெடுத்தபடி சிவனை தரிசித்த நாகம்; பக்தர்கள் பரவசம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சுயம்பு வடிவில் தோன்றிய சிவன் கோவிலில்  நந்தி சிலை மீது பாம்பு படம் எடுத்து ஆடிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சுயம்பு வடிவில் தோன்றிய சிவன் சிலையை அப்பகுதி மக்கள் ஓலை கொட்டகையில் வைத்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கோயில் கட்டிடப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அருள்மிகு ஶ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சிவபெருமான் சன்னதியின் எதிரே உள்ள நந்தி சிலை மீது நேற்று மாலை சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று சிவபெருமானை நோக்கி படமெடுத்து நீண்ட நேரம் ஆடியவாரு இருந்துள்ளது.

இதனை பார்த்த பக்தர்கள் பரவசமடைந்து ஆராத்தி எடுத்து கைகளை கூப்பி வணங்கி வழிபட்டனர் இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் படமெடுத்து வீடியோவாக சமூக வலைதலங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Video