செத்தா 1 பைசா கூட கொண்டு போக முடியாது ...! வாழ்க்கையை உணர்த்திய "வாணியம்பாடி சடலம்"...!
வேலூரில் சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லை என்று பிணத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் இவருக்கு வயது 55 இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் கடந்த சில நாட்களுக்கு முன்பு புத்து கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் குப்பன் இறந்துவிட்டார்.
இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு பின் குப்பனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது உறவினர்கள் அவரது சொந்த ஊரான நாராயணபுரம் அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் ஆனால் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்ததால் சுடு காட்டிற்கு செல்ல வழி இல்லை.
இதனால் அப்பகுதி மக்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நிலத்தின் உரிமையாளரிடம் வழி கேட்டனர் ஆனால் நில உரிமையாளர் வழி விட மறுக்கிறாள் அப்பகுதி மக்களுக்கும் நில உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் கிராம மக்கள் வேறு வழியின்றி கொம்பனின் உடலை பாடை கட்டி ஊர்வலமாக தூக்கிவந்து 20 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி ஆற்றில் இறக்கி அருகே உள்ள சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்தச் சம்பவம் குறித்து நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது