மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் மாணவிகள்; அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூரில் பள்ளி மாணவிகள் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் பயணித்து பள்ளிக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

First Published Feb 14, 2024, 4:12 PM IST | Last Updated Feb 14, 2024, 4:12 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை, புது நாடு பகுதியில் பள்ளி செல்லும் பருவத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவிகள் உள்ளனர். புதூர் நாடு பகுதியில் இருந்து கீழூருக்கு 17 கிலோ மீட்டர் பயணித்து ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.

இவர்களில் இன்று 12ம் வகுப்பு மாணவர்கள் 25 பேர் செய்முறை தேர்வு எழுதிவிட்டு திரும்பி வரும்பொழுது சரக்கு வாகனம் ஒன்றில் மிகவும் ஆபத்தான முறையில் மலை பாதையில் பயணம் செய்தனர். இது போல் பயணம் செய்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அதே போல் இதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு செம்பரை பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பொழுது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories