வேலூரில் கார் மீது சரக்கு வாகனம் உரசல்; காவலர் மீது தாக்குதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காவலரை சரக்கு வாகன ஓட்டுநரும், ஊழியரும் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு நகர காவல் நிலையத்தில் அத்திக் என்பவர் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று குடியாத்தம் காவலர் குடியிருப்பில் இருந்து தனது மனைவியுடன் வெளியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக தனது காரில் சென்றுள்ளார். 

அப்பொழுது எதிரே வந்த தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் செய்யும் மினி சரக்கு வாகனமும் காரும் உரசியதாகக் கூறப்படுகிறது. இதில் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் சரக்கு வாகன ஓட்டுநரும், ஊழியரும் காரில் சீருடை இல்லாத அத்திக் என்ற காவலரை மிரட்டும் தொணியில் பேசி தாக்கியுள்ளனர். தற்போது தாக்குதல் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Video