மதுபாட்டிலில் மிதந்த பல்லி; வீடியோ வெளியிட்டு குமுறும் குடிமகன் - திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மது பிரியர் வாங்கிச்சென்ற மதுவில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கிடந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் இன்று வீரகமோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபான கடையில் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். மதுபாட்டிலை வாங்கி பார்த்த போது அதில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மதுபான கடைக்கு சென்று இந்த மது பாட்டில் பல்லி உள்ளது இதை மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்களுக்கும், பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் தனது செல்போனில் அனைத்தையும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார்.

Related Video