அண்ணனின் மரண செய்தி கேட்டு உயிரை விட்ட தம்பி; சோகத்தில் மூழ்கிய கிராமம்

திருப்பத்தூரில் அண்ணன் உயிரிழந்த செய்தி அறிந்து தம்பி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூரிகமானிமிட்டா ஊராட்சியை சேர்ந்த லேட் குப்பகவுண்டர் என்பவருக்கு சுப்பிரமணி, நாகராஜ், சேகர், ராஜா உள்ளிட்ட நான்கு ஆண் பிள்ளைகள் இருந்துள்ளனர். இதனிடையே சுப்பிரமணி (வயது 74) உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் சுப்பிரமணி உயிரிழந்த செய்தி அறிந்த அவரது தம்பி ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Video