மகனின் தவறை உணராமல் ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்த தந்தை; வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பள்ளிக்குள் வண்டியை தாறுமாறாக ஓட்டிவந்த மாணவனை ஆசிரியர் கண்டிக்கும் நிலையில், மாணவனின் தந்தை மாணவனுக்கு ஆதரவாக ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Share this Video

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி வளாகத்தில் மாணவன் ஒருவன் தனது இரு சக்கர வாகனத்தில் பிற மாணவர்கள், ஆசிரியர்களை இடிக்கும் வகையில் தாறுமாறாக வாகனத்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவனின் தந்யை அழைத்து ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போது மாணவனும், அவனது தந்தையும் இணைந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Related Video