விடிய விடிய பெய்த தொடர் மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக, ஆந்திரா எல்லை பகுதிகளில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக ஆந்திரா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது புல்லூர் பாலாற்றில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி அதனுடைய உபரி நீரானது வெளியேறி தமிழக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பாலாற்றப்படுகையில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வெள்ளப்பருக்கானது திம்மம்பேட்டை, ஆவாரமங்குப்பம், ராம்நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.