ஆம்பூர் அருகே வீட்டில் நிறுத்தி சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

First Published Jul 29, 2023, 9:17 AM IST | Last Updated Jul 29, 2023, 9:17 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஜங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மளிகை பொருட்களை ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்  சில்லறை விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் சசிகுமார் புதியதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக்கிற்கு தனது வீட்டில் சார்ஜ் செய்துள்ளார். அப்போது எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. உடனடியாக சசிகுமார் மின் இணைப்பை துண்டித்து தீயை அணைப்பதற்குள் தீ முழுவதுமாக பரவி எலக்ட்ரிக் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.

மேலும் இதுகுறித்து இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் ஆம்பூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Video Top Stories