4 மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி மேற்கூரை; அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

புதிதாக திறக்கப்பட்ட 4 மாதங்களில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Oct 26, 2023, 6:12 PM IST | Last Updated Oct 26, 2023, 6:12 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி கள்ளியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 38 பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில்  சீரமைக்கப்பட்ட விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 17 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி இரண்டு பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டன. 

இந்த நிலையில் நான்கு நாட்கள்  தொடர் விடுமுறைக்கு பின்பு பள்ளியை திறந்து பார்த்தபோது பள்ளி கட்டிடத்தில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து கீழே விழுந்து உள்ளது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று பள்ளிக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.

இடிந்து விழுந்த மேற்கூறையின் சிமெண்ட் பூச்சி திரும்பவும் கொத்தி எடுக்கப்பட்டு மீண்டும் சரி செய்யப்படும். மேலும் பள்ளி கட்டிடம் கட்டிய பொறியாளரிடம் இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம். இதேபோல் வேறு எங்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டபொறியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.