Asianet News TamilAsianet News Tamil

“அண்ணன் செந்தில் பாலாஜி விரைவில் வெளியே வரவேண்டும்” உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வினோத வழிபாடு

ஆம்பூர் அருகே செந்தில் பாலாஜி சிறையில் இருந்து  விரைவில் வெளி வர வேண்டி சென்னை உயர்நீதி மன்ற  வழக்கறிஞர் தனது  குடும்பத்தினருடன் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு.

First Published Feb 19, 2024, 1:49 PM IST | Last Updated Feb 19, 2024, 1:49 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா (வயது 32). இவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வேண்டி இன்று ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து செந்தில் பாலாஜி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து, முழங்கால் முட்டி பிரார்த்தனை செய்து  கோவிலை வலம் வந்தார்.

Video Top Stories