வேலூர் கோட்டையில் 480 கலைஞர்கள் பங்கேற்று நடனமாடிய சாதனை நிகழ்ச்சி
"சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் சுதந்திர தினவிழாவையொட்டி சங்கு முழங்க வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா புக் ஆப் ரேக்கார்ட்ஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி.
வேலூர்மாவட்டம், சுதந்திரத்திற்காக வித்திட்ட வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் நாட்டின் 76வது சுதந்திர தினவிழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய சுதந்திர போராட்டங்களுக்கு முதன் முதலில் 1806-ம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் "சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் பெற்ற சுதந்திரத்தை பேனிக்காக்க வலியுறுத்தி கின்னஸ் சாதனை முயற்சியாக பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் பாரத நாட்டிய பள்ளி மூலம் நடத்தப்பட்ட இதனை நாரயாணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி மற்றும் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் துவங்கி வைத்தனர். இச்சாதனை நிகழ்ச்சியில் 7 வயது முதல் உள்ள ஆண், பெண் பரத நாட்டிய கலைஞர்கள் சுமார் 480க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் மூவர்ணக்கொடி ஏந்தியும், சங்குகள் முழங்கவும் தேச பக்தி பாடலுக்கு பரதம் ஆடினர்.
நிகழ்ச்சியின் முடிவில் கின்னஸ் சாதனை பரத நாட்டியத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.