எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வேண்டும்; ராணிப்பேட்டையில் அதிமுகவினர் தங்க தேர் இழுத்து வழிபாடு

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரவேண்டும் என தெரிவித்து தைப்பூச திருநாளில் கட்சி தொண்டர்களுடன் தங்கத்தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்த அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார்.

First Published Jan 25, 2024, 10:56 PM IST | Last Updated Jan 25, 2024, 10:56 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் தை மாத தைப்பூச தினத்தை முன்னிட்டு காலையில் உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் ஸ்வாமிகளுக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, திருநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் பாலமுருகன் சுவாமி தங்க ரதத்தில் நின்று மயில் மீது அமர்ந்தபடி பல்லாக்கில் கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவில் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி அளித்தார். மேலும் தைப்பூச நிகழ்வின் போது ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும் என தெரிவித்து தனது கட்சி தொண்டர்களுடன் பங்கேற்று சிறப்பு பூஜையை செய்து தங்க ரதத்தை கோவில் முழுவதும் மூன்று முறை அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டு கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினார்.

மேலும் தைப்பூச திருநாளில் ராணிப்பேட்டை மாவட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்தும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வணங்கி சென்றனர்.

Video Top Stories