வாணியம்பாடியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய மணல்; துடைப்பத்துடன் சாலையை சுத்தம் செய்த எஸ்ஐ

வாணியம்பாடி சாலையில் இருந்த மணலால் வாகன ஓட்டிகள் கீழே விழும் நிலை ஏற்பட்டதால் அவ்வழியாக வந்த உதவி ஆய்வாளர் துடைப்பத்தால் அதனை சுத்தம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Video

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோட்டை பகுதியில் உள்ள பட்டேல் யாகூப் சாலையில் சாலை முழுவதும் மணல்கள் இருந்ததால் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சிறுமியுடன் சென்று கொண்டிருந்த நபர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அவ்வழியாக சென்ற வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் விஜய் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவர்களை மீட்டு அனுப்பி வைத்துவிட்டு சாலை முழுவதும் இருந்த மணலை துடைப்பத்தால் பெருக்கி தூய்மைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video