பள்ளிப்பேருந்தில் வந்து மதபிரசாரம் செய்த 30 பேரை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே பள்ளிப் பேருந்தில் வந்து மத பிரசாரத்தில் ஈடுபட்ட 30 பேரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Video

வேலூர்மாவட்டம், திருவலம் அருகே உள்ள அம்முண்டி கிராமத்தில் சியோன் இண்டர் நேஷ்னல் என்ற பள்ளி பேருந்தில் 30 பேர் கொண்ட கும்பல் மதப்பிரசாரம் செய்து அக்கிராமத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கி மதமாற்றம் செய்யும் வகையில் பிரசாரம் செய்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பேருந்தையும் முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த திருவலம் காவல்துறையினர் மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை மீட்டு அறிவுரை வழங்கி அங்கியிருந்து அனுப்பி வைத்தனர்.

Related Video