அலட்சியமாக சாலையை கடந்த பைக்; விபத்தை தவிர்க்க நினைத்தவர் விபத்தில் சிக்கிய பரிதாபம்

திருப்பத்தூரில் அலட்சியமாக சாலையை கடந்த இருசக்கர வாகன ஓட்டி மீது மோதமல் இருக்க காலை வேகமாக திருப்பிய நபர் சாலையோரம் மோதி விபத்தில் சிக்கினார்.

First Published Mar 21, 2024, 10:30 PM IST | Last Updated Mar 21, 2024, 10:30 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 36). இவர் கட்டேரி பகுதியில் இருந்து பக்கிரிதக்கா பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் முன்பின் பார்க்காமல் தனது இருசக்கர வாகனத்தை நேராக திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையை கடந்தார்.

அப்போது வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரியின் பின்புறம்  இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதன் காரணமாக மனோகரன் தலையில் பலத்த காயமடைந்தது பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர்  மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மனோகர் ரோட்டை கடக்க முற்படும்போது அதன் எதிரே குடியாத்தம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜ் (48) என்பவர் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி உள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செந்தில்குமாரின் கால் உடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதன் சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Video Top Stories