Watch : உலக சிட்டுகுருவிகள் தினம்! - காகா குருவிகளுக்கு உணவு மற்றும் நீழ் வழங்கிய காவலர்கள்!

உலக சிட்டுகுருவிகள் தினத்தையொட்டி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான காவலர்கள் சிட்டு குருவிகளுக்கு சிறுதானிய உணவுகள் மற்றும் நீர் வழங்கினர்.
 

Share this Video

சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாக உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான காவலர்கள் மண் சட்டிகளில் தண்ணீர் மற்றும் சோளம் கம்பு உள்ளிட்ட சிறுதானிய உணவுப் பொருள்களை வைத்தும் சிட்டுக்குருவிகள் தினத்தை கடைபிடித்தனர். இது போன்று கோவில்பட்டி பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் சிட்டுக்குருவிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்களை வைத்து பாதுகாக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Video