மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டி - சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய தூத்துக்குடி அணி

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெண்கள் கபாடி போட்டியில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் பொதுமக்கள் மற்றும் மின்னல் ஸ்போர்ட்ஸ் கபாடி குழு சார்பாக மாவட்ட அளவிலான மின்னொளியில் பெண்களுக்கான கபாடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோவில்பட்டி, தூத்துக்குடி விளாத்திகுளம் காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் அணியும், மின்னல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இறுதிப்போட்டியில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் அணி 32 -30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

Related Video