எம்.பி. கனிமொழியுடன் இணைந்து வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

First Published Dec 26, 2023, 2:19 PM IST | Last Updated Dec 26, 2023, 2:19 PM IST

கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகள் குறி்த்து ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று தூத்துக்குடி வந்தார். அவரை பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆய்வைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அனைத்துத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Video Top Stories