திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு! பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த நபர்! அலறிய பக்தர்கள்! நடந்தது என்ன?

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் ஒருவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

First Published May 26, 2024, 9:26 AM IST | Last Updated May 26, 2024, 9:26 AM IST

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் கடங்கநேரி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோவில் கடற்கரை அருகில் உள்ள அய்யா கோவில் பகுதியில் வைத்து மது அருந்திவிட்டு உணவு சாப்பிட்டு விட்டு தனது அருகில் வாங்கி வைத்திருந்த பாட்டிலில் பெட்ரோல் இருந்ததை  தனது உடலில் ஊற்றி திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 100% தீக்காயங்களுடன் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாதவன் தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Video Top Stories