Watch : தூத்துக்குடி உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழா! - பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்!

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற உச்சினி மாகாளியம்மன் கோவில் திருவிழாவை விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்த்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினார்
 

First Published Mar 16, 2023, 1:36 PM IST | Last Updated Mar 16, 2023, 1:36 PM IST

தூத்துக்குடி மட்டக்கடை பஜாரில் உள்ள உச்சினி மாகாளி அம்பாள் கோவில் கொடை விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பால்குடம் வீதிஉலா, மாகாப்பு அலங்கார தீபாராதனை, படைக்கஞ்சி வார்த்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் இறுதி நாளான நேற்று பூக்குழி இறங்குதல் நடந்தது.

இதை ஒட்டி கோயிலின் முன்பு பிரத்யோகமாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த திருவிழாவில் மட்டக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
 

Video Top Stories