திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கிய கடல்; குளம் போல் காட்சி அளிப்பதால் பக்தர்கள் ஏமாற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய நிலையில் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளிப்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

First Published Jul 5, 2023, 11:43 AM IST | Last Updated Jul 5, 2023, 11:43 AM IST

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனது கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீர் அறிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சுப்ரமணிய சுவாமி கோவில் கடலானது அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவதும், சில மணி நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பௌர்ணமி என்பதால் கோவில் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறை மீது ஏறிக்கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 100 அடி கடல் உள் வாங்கியதால் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்து வருகிறது.

Video Top Stories