Watch : தூத்துக்குடி அருகே பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் கள்ள சந்தையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ200 கிராம் கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா வியாபாரி கிருஷ்ணமூர்த்தி என்ற நபரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

First Published Mar 16, 2023, 1:39 PM IST | Last Updated Mar 16, 2023, 1:39 PM IST

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்ப நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது

இதைத்தொடர்ந்து போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் அனிதா வேணி தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்

கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததாக விசாரனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா விற்பனை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories