VIDEO

தூத்துக்குடியில் நடைபெற்ற சாகர் கவாஜ் என்ற கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடல் பகுதியில் வழியாக ஊடுருவ முயன்ற என்ற 17 பேர் கைது போலி வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
 

Share this Video

மும்பையில் கடல் பகுதி வழியாக வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்பு ஆண்டுதோறும் கடல் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை கடலோர பாதுகாப்பு குழுமம் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் ஆண்டுதோறும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்

அந்த வகையில் கடல் பாதுகாப்பு குறித்து சாகர் கவாஜ் என்ற பெயரில் இரண்டு நாள் ஒத்திகை நிகழ்ச்சி தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெற்றது இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் பழைய துறைமுகம் கடல்பகுதி வழியாக தூத்துக்குடிக்குள் ஊடுருவமுயன்ற 17 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து ஆர் டி எக்ஸ் ,டைம்பாம்,டெட்டனேட்டர் உள்ளிட்ட போலி வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Video