திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.49.50 கோடியில் யானைக்கு நினைவு மண்டபம்; அடிக்கல் நாட்டிய அமைச்சர

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.49.50 கோடியில் யானைக்கு மணி மண்டபம் கட்ட அமைச்சர் சேகர் பாபு இன்று அடிக்கல் நாட்டினார்.

First Published Nov 6, 2023, 8:05 PM IST | Last Updated Nov 6, 2023, 8:05 PM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சஷ்டி திருவிழா முன்னேற்பாடு குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்ய வருகை தந்தனர். முன்னதாக அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வெளியே வந்த அவர்கள் கோவில் வளாகத்தில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார். பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் பசு மடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் சேகர் பாபு அடிக்கல் நாட்டினார்.

Video Top Stories