ஓசி பணத்துக்கு நிற்க மாட்டியா? சேர் கேக்குதா? உரிமைத் தொகைக்காக வந்த பெண்களை வசை பாடிய அதிகாரி

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை நிலை அறிய வந்த பெண்களை அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளை கூறி திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Velmurugan s  | Published: Sep 21, 2023, 11:53 AM IST

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிவதற்காக ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி கட்டுக்கடங்காமல் இருந்த பெண்களை பார்த்து ஆவேசத்தில் வசைபாடத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அதிகாரி எருமை மாடுகளா, அறிவு இல்லையா, சோத்தை தானே திங்குறீங்க. ஓசி பணம் வாங்க வந்துட்டு நிற்க முடியாதா, உக்கார சேர் கேக்குதா? என்று பேசினார். இதனை அருகில் இருந்த நபர் தனது செல்போனில் படம் பிடிக்கத் தொடங்கியதும். நான் பேசியது தவறு தான் என்று வருத்தம் தெரிவித்தார்.

Read More...

Video Top Stories