தூத்துக்குடியில் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தமிழ் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடினர்.

First Published Jan 8, 2023, 11:37 AM IST | Last Updated Jan 8, 2023, 11:37 AM IST

அமெரிக்கா, இங்கிலாந்து, எஸ்டோனியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 37 பேர் சென்னைக்கு வந்து, ஹங்கேரியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் அங்கிருந்து ஆட்டோவில் தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான பண்ணையில் பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட வெளிநாட்டு பயணிகள் தமிழக மரபுப்படி ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் சேலை கட்டியும் மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இறுதியில் அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் மோர்கன் கூறுகையில், 'தமிழகத்தின் பாரம்பரியத்தை அறிய. பொங்கல் பண்டிகை ஒரு வாய்ப்பு என்றார்.