கோவில்பட்டியில் ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சாகச பயணம் மேற்காள்ள வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share this Video

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாலாட்டின்புத்தூர் வழியாக அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் மூலமாக மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

கல்லூரிக்குச் செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் நிலை அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் பேருந்துகளில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நாலாட்டின் புத்தூர் வரை ஆபத்தான முறையில் படிக்கட்டிகளிலேயே மாணவர்கள் தொங்கி கொண்டு சென்ற நிலைமையை காண முடிந்த்து. எனவே கல்லூரி சென்று வரும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Video