கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜாநாராயணன் மணி மண்டபத்தை பார்வையிட்ட ஆட்சியர்

கோவில்பட்டி கி. ராஜநாராயணன் நினைவரங்கத்தை  புதிதாக பொறுப்பேற்றுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி பார்வையிட்டார்.

Share this Video

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக லட்சுமிபதி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்டங்களில் உள்ள சுதந்திர விடுதலை போராட்ட வீரர்களின் மணிமண்டபங்கள் மற்றும் நினைவிடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அந்த வகையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கரிசல் காட்டு இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் நினைவு அரங்கை பார்வையிட்டு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கி.ரா எழுதிய நூல்கள் டிஜிட்டல் தொடுதிரை, மேலும் அவர் பயன்படுத்திய மேஜை, நாற்காலி, எழுதிய நூல்கள், புகைப்படங்களையும் பார்வையிட்டு அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். 

முன்னதாக கி ராஜநாராயணன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Related Video