புரட்டாசிக்கு கோவிந்தா, எடப்பாடிக்கு கோவிந்தா; கூட்டணி முறிவுக்கு பின் அலப்பறை செய்த பாஜக

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து கோவில்பட்டியில் பாஜகவினர் அதிமுகவின் முடிவை வரவேற்று கோஷம் எழுப்பினர்.

Share this Video

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அதிமுகவினர் பல்வேறு பகுதிகளிலும் இதனை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திடீரென ஓன்று திரண்ட பாஜகவினர் அதிமுகவின் முடிவை வரவேற்று கோஷம் எழுப்பினர். புரட்டாசிக்கு கோவிந்தா, எடப்பாடிக்கு கோவிந்தா என அவர்கள் எழுப்பிய கோஷத்தை அவ்வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

Related Video