Watch : கோவில்பட்டி அருகே திருநங்கைகள் மீது தாக்குதல்! - இருவரை கைது செய்து போலீசார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநங்கைகளின் முடியை அறுத்து தாக்குதல் நடத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

First Published Oct 14, 2022, 3:57 PM IST | Last Updated Oct 14, 2022, 3:57 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் வசித்து வரும் திருநங்கைகள் அனன்யா, மகேஷ். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7ந்தேதி கழுகுமலையில் கோவில்பட்டிக்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டு இருக்கும் போது, கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவாயுவான் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகளை கடத்தி சென்று கழுகுமலை அருகே கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுபகுதியில் வைத்து தாக்கியுள்ளனர். மேலும் அனன்யாவின் முடியை அறுத்துள்ளனர்.

அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று நோவாயுவான், விஜய் கூறியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். நோவாயுவான், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்ககூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையெடுத்து 2 திருநங்கைகளும் அங்கிருந்து யாரிடமும் சொல்லமால் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் கிரேஸ்பானு என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தது மட்டுமின்றி, நோவாயுவான், விஜய் இருவரும் கழுகுமலை காவல்துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories