பள்ளி விழாவில் தனது நண்பனை நினைவுகூர்ந்து தேம்பி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி அருகே பள்ளி ஆண்டு விழாவில் தனது நண்பரை நினைத்து கண்ணீர் விட்டு அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ.

First Published Jan 31, 2024, 11:33 AM IST | Last Updated Jan 31, 2024, 11:33 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் உள்ள இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு  மறைந்த இந்து நாடார்கள் உறவின்முறை முன்னாள் பொதுச் செயலாளர் காளிராஜன் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். காளிராஜன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் மறைந்த அவருடைய நண்பர் காளிராஜன் பற்றியும், இருவருக்குள் இருந்த நட்பினை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது திடீரென தனது நண்பரை நினைத்து தேம்பி, தேம்பி கண்ணீர் விட்டு அழ தொடங்கினார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் முன்னாள் அமைச்சரை ஆறுதல் படுத்தினர். இருந்தபோதிலும் தனது நண்பரை பற்றி பேசி முடிக்கும் வரை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கண்களில் கண்ணீர் துளிகள் நிற்கவில்லை வந்து கொண்டே இருந்தது.

Video Top Stories