Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்

திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த படுகர் மக்கள் உற்சாகமாக நடனமாடியதை கண்டு மெய்சிலிர்த்து நின்ற பிரபல நடிகை பிரியா ஆனந்த்.

First Published Jun 29, 2024, 10:41 AM IST | Last Updated Jun 29, 2024, 10:41 AM IST

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளதால் கோயிலுக்கு விடுமுறை நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகளவில் வருகை தருவார்கள்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பகுதியைச் சேர்ந்த படுகர் இன மக்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு  மூன்று பேருந்துகளில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் சாயரட்சை பூஜையில் சுவாமியை வழிபட்ட அவர்கள் வெளியே வந்ததும் தங்கத்தேர் முன்பு கூட்டமாக குவிந்தனர்.

அதன்பிறகு தங்களது பாரம்பரிய மலைவாழ் நடனமான படுகு நடனமாடினர். ஆண்களும், பெண்களும் கோயில் தங்கத்தேர் புறப்படும் இடம் முன்பு ட்ரம்ஸ், கிளாரிநெட் இசையுடன் வட்டமாக சுற்றி வந்து ஆடிய நடனத்தை அங்கிருந்த பக்தர்கள் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போனில் படமும் பிடித்தனர். அப்போது அங்கு வந்த நடிகை கிரியடி ஆனந்த் அவர்களது நடனத்தை கண்டு ரசித்தார்.

Video Top Stories