8 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைத்த 9 வயது சிறுவன்

தூத்துக்குடியில் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 9 வயது மாணவன் தொடர்ந்து நீச்சல் குளத்தில் மிதந்தவாறு எட்டு மணி நேரம் மிதப்பதற்கான உலக சாதனை படைத்துள்ளான்.

Share this Video

தூத்துக்குடி சேர்ந்த 9 வயது சிறுவன் ஹர்சன் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் மூன்று வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்றுள்ள இவர் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீச்சலில் மிதப்பதற்கான உலக சாதனை முயற்சி செய்ய முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ் வில் நீச்சல் குளத்தில் காலை 10 மணி முதல் ஹர்ஷன் தொடர்ந்து மிதந்தவாறு தொடர்ந்து எட்டு மணி நேரம் மிதப்பதற்கான உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இவரது இந்த சாதனை முயற்சியை ஏராளமானோர் பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்

இன்று மாலை நடைபெறும் சாதனை நிறைவு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கலந்து கொண்டு மாணவன் ஹர்சனின் உலக சாதனையை பாராட்டி கௌரவிக்க உள்ளார்.

Related Video