Watch : இலங்கைக்கு கடத்த இருந்த 43 பண்டல் பீடி இலைகள் பறிமுதல்! கியூ பிரிவு போலீசார் விசாரணை!

தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான 43 பண்டல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தப்பியோடிய நபர்களை கியூ பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Share this Video

தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கியூபிரிவு போலீசார் இனிகோ நகர் கடற் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டதில், இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ எடையுள்ள 43 பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேன் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களையும் கியூப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.



காவல்துறையை கண்டதும் தப்பி ஓடிய கடத்தல் கும்பல் குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தீவிரமாக தேடியும் வருகின்றனர்

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனங்களை க்யூப் பிரிவு போலீசார் சுங்க இலாக அலுவலகத்தில் ஒப்படைத்து நிறுத்திவைத்துள்ளனர்.

Related Video