திருவாரூரில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த மூவர் கைது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Share this Video

திருவாரூர் விளமல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

இதில் திருவாரூர் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சாகுல் ஹமீது, அஹமத்துல்லா, முகமது மகசூன்மகதீர், ஹாஜா நவாஸ் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்து நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

Related Video