படகில் கமலாலயம் சென்ற முதல்வர்; நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி

திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமலாலய குளம் தொடர்பாக தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

First Published Feb 22, 2023, 10:20 AM IST | Last Updated Feb 22, 2023, 10:20 AM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள நிலையில், நேற்று இரவு கமலாளய தெப்பக்குளத்தில் படகில் சவாரி செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர். 

இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Video Top Stories